உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 19ம் இடத்திற்கு முன்னேற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 19ம் இடத்திற்கு முன்னேற்றம்

கடலுார் : கடலுார் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில் 92.63 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 4.14 சதவீதம் கூடுதலாகும்.கடலுார் மாவட்டத்தில் உள்ள 246 அரசுப்பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 148 தனியார் பள்ளிகள் என 440 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 908 மாணவர்கள், 15 ஆயிரத்து 661 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 569 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.இவர்களில் 15 ஆயிரத்து 230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என, மொத்தம் 30 ஆயிரத்து 169 தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 90.08 சதவீதம், மாணவிகள் 95.39 சதவீதம்.மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 92.63 ஆகும். கடந்தாண்டைவிட 4.14 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 33ம் இடத்தில் இருந்து 19ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி

மாவட்டத்தில் 170 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 76, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 9, தனியார் பள்ளிகள் 85ம் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை