உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர்களுக்கு தர்ம அடி

வாலிபர்களுக்கு தர்ம அடி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக் திருட முயன்றதாக, வாலிபர்களை கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக வாலிபர்கள் இருவர் சுற்றி வந்தனர். அப்போது, அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றிருந்த பைக்கை திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவர்களை சுற்றி வளைத்த கிராம மக்கள், தர்ம அடி கொடுத்து, கம்மாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர்கள், சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், வீட்டு வாசலில் நிறுத்தியிருக்கும் பைக்கை திருட முயற்சித்ததும் தெரிய வந்தது. பின்னர், காயமடைந்த இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து, இருவரையும் தனியிடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பைக் திருடர்களை கிராம மக்களே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை