உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடிப்பெருக்கு விழாவிற்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்

ஆடிப்பெருக்கு விழாவிற்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்

வேப்பூர்- வேப்பூர் அருகே ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.வேப்பூர் அடுத்த சிறுநெசலுார் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா இன்று நடக்கிறது. இதையொட்டி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.ஊராட்சித் தலைவர் மஞ்சுளா வேல்முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் ரஜினி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கினார்.தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, நிர்வாகிகள் ராஜேஸ்வரி, செந்தில்குமார், மாரிமுத்து, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, தி.மு.க., ஆட்சியின் சாதனைகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை