உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை முகாம்

கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை முகாம்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை முகாம் நடந்தது.கடலுார் கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், அப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை முகாம் நடந்தது. குள்ளஞ்சாவடியில் நடந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் அகிலா தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி மகப்பேறு மருத்துவர் சிவசங்கரி, கர்ப்பிணிகளை பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினார். முகாமில் குள்ளஞ்சாவடி, தொண்டமாநத்தம், புலியூர், தீர்த்தனகிரி, திருச்சோபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குள்ளஞ்சாவடி மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன், டாக்டர் சுகன்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை