உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா பழக்கத்தால் மகன் பாழாகிறான்; தந்தையின் வீடியோ வைரலாகி பரபரப்பு

கஞ்சா பழக்கத்தால் மகன் பாழாகிறான்; தந்தையின் வீடியோ வைரலாகி பரபரப்பு

விருத்தாசலம் : கஞ்சா பழக்கத்தால் பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் பாழாவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குமுறும் தந்தையின் வீடியோ வைரலாகியதால் பரபரப்பு நிலவியது.மாநிலம் முழுவதும் மதுவுக்கு அடுத்தபடியாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் அதிக போதை தரும் கஞ்சாவை புகைக்கும் மாணவர்கள், இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.போலீசாரையே தாக்கும் அளவுக்கு மதுபோதை தலைக்கேறுவதால், அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.இந்நிலையில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகனும், அவரது நண்பர்களான 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.தனது மகனுக்கு வந்த ஸ்காலர்ஷிப் பணத்தை வைத்துக் கொண்டு கஞ்சா வாங்கி, பயன்படுத்தி வருகிறான். இதனை கண்டறிந்த நான், எனது மகன் உட்பட மூவரையும் அழைத்துக் கொண்டு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் விட்டேன்.அங்கு விசாரித்த போலீசாரிடம், கஞ்சா விற்பனை செய்த நபர் குறித்த தகவல்களை எனது மகன் உட்பட மூவரும் தெரிவித்தனர். இருப்பினும் காலை முதல் மாலை வரை விசாரணை செய்த போலீசார், மாணவர்கள் மூவரையும் எச்சரித்து அனுப்பினர்.ஆனால், கஞ்சா வியாபாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பிட்ட அந்த நபர், அதே பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை செய்கிறார். எனது மகனை போல பல மாணவர்களின் வாழ்க்கை பாழாகிறது எனக் கூறி மாணவரின் தந்தை குமுறும் வீடியோ வைரலாகி வருகிறது.கஞ்சா போதைக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுத்திட சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ