| ADDED : ஜூலை 26, 2024 04:34 AM
சேத்தியாத்தோப்பு: விவசாயிகள், 50 சதவீத மானியத்தில் பசுந்தால் உர விதைகளை வாங்கி பயன்பெறலாம் என, வேளாண் இணை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.கீரப்பாளையம் வட்டா ரத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பரதுார், கீழ்நத்தம் ஆகிய பகுதிகளில் குறுவை சிறப்பு தொகுப்பு இயந்திர நடவு நெல்வயல்களில் வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை ஆய்வு செய்தார்.மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் கீழ்நத்தம் கிராமத்தில் பசுந்தாள் உரம், தக்கைப் பூண்டு விதைப்பு செய்யப்பட்டுள்ள வயல்களை ஆய்வு செய்த அவர், விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். 50 சதவீத மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களில் பசுந்தாள் உர விதைகளை வாங்கி நிலங்களில் விதைப்பு செய்து மண்வளத்தினை காத்திட வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், அலுவலர் சிவப்பிரியன், உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடேசன், ராஜ்பாபு, புகழேந்தி, வேல்முருகன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.