உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி.,யில் தமிழர்களுக்கு வேலை கடலுார் காங்., வேட்பாளர் பேட்டி

என்.எல்.சி.,யில் தமிழர்களுக்கு வேலை கடலுார் காங்., வேட்பாளர் பேட்டி

கடலுார் : என்.எல்.சி.,யில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலுார் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கூறினார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது;இண்டியா கூட்டணியில் கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு வலது மற்றும் இடதுகரங்களாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் உள்ளனர். கடலுார் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை சார்ந்த மற்றும் கடலுார் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு என்.எல்.சி., தண்ணீர், கொண்டுசெல்லப்படும். கடலுார் துறைமுகம் விரிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை