உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மே தின விடுமுறையில் மது விற்பனை ஜோர்

மே தின விடுமுறையில் மது விற்பனை ஜோர்

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் மே தின விடுமுறையிலும் போலீஸ் ஆசியுடன் மது விற்பனை அமோகமாக நடந்தது.மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையறிந்த மதுப்பிரியர்கள் சிலர், நேற்று முன்தினமே தேவையான மதுபானங்களை வாங்கி, இருப்பு வைத்தனர்.நேற்று அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், விருத்தாசலம் உட்பட மாவட்டம் முழுவதிலும் நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளுக்கு அருகே மது விற்பனை அமோகமாக நடந்தது.மொபட் வகை வாகனங்களின் பெட்டிகளில் மதுபானங்களை வைத்து, கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடந்தது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மது வகைகள், 50 முதல் 200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனையானது.இதனை தடுக்க வேண்டிய போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. டாஸ்மாக் விடுமுறை நாளிலும் அமோகமாக மது விற்பனையானது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை