உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் கடலுாரில் 13ம் தேதி திறப்பு

பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் கடலுாரில் 13ம் தேதி திறப்பு

கடலுார்: கடலுார் பாரதி சாலையில் பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் திறப்பு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது.கடலுார் சுமங்கலி சில்க்சின் மேலும் ஒரு பிரமாண்டமான பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் கடலுார், பாரதி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து உரிமையாளர்கள் நிஸ்டர், ஹர்ஷத் கூறியதாவது: கடலுார், விழுப்புரம், புதுச்சேரி மக்களின் வசதிக்காக பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் 1 ஏக்கர் பரப்பளவில் 5 மாடிகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி உள்ளது. முதல் தளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவு, 2வது தளத்தில் ஆண்களுக்கான ரெடிமேட் பிரிவு, 3வது தளத்தில் குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடை பிரிவு உள்ளது.5 மாடிகளிலும் லிப்ட் மற்றும் எக்ஸ்லேட்டர் வசதி உள்ளது. திறப்பு விழா சலுகையாக 30 நாட்களுக்கு 10 முதல், 12 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை