கடலுார், : திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் புணரமைப்பு திருப்பணிகள் நடக்க இருப்பதையொட்டி சுவாமி பாலாயம் செய்யப்பட்டன. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பிரசித்திப் பெற்ற பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சுவாமி கோவிலுக்கு கடந்த 2011ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் பாடலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் செய்ய ரூ.2 கோடி மதிப்பில் புணரமைப்பு திருப்பணிகள் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு சுவாமி பாலாலயம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நவகிரக கலச பூஜை, ஹோமம், கோ பூஜை, மேல்தளம், ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், பூர்ணாகிதி, மகா தீபாராதனைகள் நடந்தன. நேற்று காலை சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு செய்து, ராஜ கோபுரம், விமானங்கள் பாலாலய கும்பாபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் சுரேஷ், ஆய்வாளர் பரமேஸ்வரி, சரவணரூபன், வேல்விழா, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் எம்.எல்.ஏ., அய்யப்பன், தொழிலதிபர்கள் சங்கர், பாலு, அனிதா ரமேஷ், அ.தி.மு.க நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஆறுமுகம், கவுன்சிலர்கள் சங்கீதா வசந்தராஜ், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.