உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்

உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்

வடலுார்: வடலுார் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது ஈட்டி பாய்ந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண தொகை ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.வடலுார் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் மகன் கிஷோர், 15; வடலுார் எஸ்.டி., சியோன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த 24ம் தேதி பள்ளி மைதானத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, சக மாணவர் எறிந்த ஈட்டி சிறுவனின் தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், 30ம் தேதி உயிரிழந்தார். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக அரசுரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கும் என அறிவித்தார்.இந்த நிவாரணத் தொகைக்கான காசோலையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று சிறுவனின் தாய் சிவகாமியிடம் வழங்கினார். குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன், வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், தி.மு.க., நகர செயலாளர் தமிழ்செல்வன், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், கவுன்சிலர்கள் மாலதிபிரகாஷ், ராஜபூபதி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை