உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே பாழடைந்த கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.பண்ருட்டி அடுத்த ஆத்திரிக்குப்பம் கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் சுமார் 65 அடி ஆழமுள்ள பயன்பாடற்ற தண்ணீர் இல்லாத கிணற்றில், அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன்,65; தவறி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு அலுவலர் இளங்கோ தலைமையிலான வீரர்கள் பாதுகாப்பாக கிணற்றில் விழுந்த முதியவர் ராமசந்திரனை மீட்டனர்.மீட்கப்பட்ட முதியவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை