உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

சரஸ்வதி வித்யாலயா 100 சதவீதம் தேர்ச்சி

விருத்தாசலம், : விருத்தாசலம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்விக்குழுமம், ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.கல்விக்குழும தலைவர் டாக்டர் சுரேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ் வரவேற்றார். அதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பொருளாளர் அருண்குமார், முதல்வர் சக்திவேல் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை