உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

புவனகிரி : புவனகிரி அருகே வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை வசந்தா வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயமாலா செல்வக்குமார், ஊராட்சி உறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாராமன் தேர்தல் பார்வையாளராக செயல்பட்டார். இதில் எஸ்.எம்.எஸ்., தலைவராக அதிர்ஷ்டவதி, துணைத் தலைவராக அருணா மற்றும் உறுப்பினர்கள் புதியதாக தேர்வு செய்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதியினர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை