உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு பகுதியில் அதிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகளால் மாணவர்கள் அச்சமடைகின்றனர். நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் செம்மண் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள் வந்து செம்மண் ஏற்றி செல்கின்றன. இந்த குவாரிகளுக்கு செல்லும் வழியில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என சாலை பிசியாக காணப்படும்.இந்த நேரத்தில் குவாரிக்கு வந்து செம்மண் ஏற்றிய லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அதிவேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்குவதை நிறுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை