மேலும் செய்திகள்
பால் வியாபாரி திடீர் மாயம் மனைவி போலீசில் புகார்
1 hour(s) ago
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சுறுசுறுப்பு
4 hour(s) ago
விருத்தாசலம், : தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு, வருவாய் அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் என நேற்று முன் தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தினை, நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், வருவாய்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். நெல்லிக்குப்பம்
லோக்சபா தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் இனி தேர்தல் முடியும் வரை அவரது அலுவலகங்களையோ, அரசு வாகனங்களையோ பயன்படுத்த முடியாது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் அறிவித்தவுடன் கமிஷனர் கிருஷ்ணராஜன் முன்னிலையில் சேர்மன் ஜெயந்தி பயன்படுத்தி வந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. நகரமன்ற கூட்ட அறைக்கும் சீல் வைத்தனர். அதேபோல் சேர்மன் ஜெயந்தி பயன்படுத்தி வந்த அரசு காரை நகராட்சியில் ஒப்படைத்தார். திட்டக்குடி
திட்டக்குடியில் உள்ள தொகுதி எம்.எல்.ஏ.,அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் பிரிவு உதவியாளர் லட்சுமணன், வதிஷ்டபுரம் கிராம உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
1 hour(s) ago
4 hour(s) ago