உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பைக்கில் தவறி விழுந்து கொத்தனார் பலி

 பைக்கில் தவறி விழுந்து கொத்தனார் பலி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே, பைக்கில் தவறி விழுந்து கொத்தனார் பலியானார். மேல்பட்டாம்பாக்கம், ஆண்டிபாளையத்தை சேர்ந்த இருசப்பன் மகன் ஆனந்தன்,35; கொத்தனார். அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் குமரன்,34; சென்டரிங் தொழிலாளி. நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்துக்கு வேலைக்கு சென்றனர். அங்கிருந்து பைக்கில் மாலை வீடு திரும்பினர். இந்த பைக்கை குமரன் ஒட்டி வந்தார். ஆனந்தன் பின்னால் உட்கார்ந்து வந்தார். மேல்பட்டாம்பாக்கம், மிளகாய்குப்பம் அருகே, வேகத்தடையில் செல்லும் போது பின்னால் உட்கார்ந்திருந்த ஆனந்தன் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த குமரன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை