உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணை நாய் கடித்த விவகாரம் உரிமையாளர் மீது வழக்கு

 பெண்ணை நாய் கடித்த விவகாரம் உரிமையாளர் மீது வழக்கு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தட்டானோடை மேற்கு தெருவை சேர்ந்த பஞ்சமூர்த்தி மனைவி தனலட்சுமி, 47; இவர் கடந்த, 9 ம் தேதி வீட்டிலிருந்து செல்வராஜ், வீட்டின் அருகே நடந்து சென்ற போது, வளர்ப்பு நாய் கடித்தது. காயமடைந்த தனலட்சுமி தடுப்பூசி போட்டு வருகிறார். இந்த சிகிச்சைக்கான செலவினை ஏற்றுக் கொண்டு நாயை, அப்புறப்படுத்தி கொள்வதாக செல்வராஜ் கூறினார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி சிகிச்சைக்கான, செலவு தொகையை செல்வராஜிடம் கேட்ட போது அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனலட்சுமி நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளார். சேத்தியாத்தோப்பு போலீசார் நாய் உரிமையாளர் செல்வராஜ் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை