உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் சான்றிதழ்

நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் சான்றிதழ்

நெல்லிக்குப்பம் : கடலுாரில் நடந்த குடியரசு தினவிழாவில் நெல்லிக்குப்பம் கமிஷனருக்கு சிறந்த பணியாளர் என பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனை பாராட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் வழங்கினார். மேலும், நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆறுமுகம், ஜானகிராமன் ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கமிஷனர் இதற்கு முன், சிறப்பாக பணியாற்றியதற்காக 8 முறை விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கமிஷனரை சேர்மன் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை