உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி : பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாட்டு வண்டி தொழிலாளர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். சி.என்.பாளையம், பலாப்பட்டு உள்ளிட்ட பகுதியில் மணல் குவாரி ஏற்படுத்திட வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் செல்லப் பிள்ளை தலைமை தாங்கினார். நாகப்பன், அஞ்சாபுலி, முத்துக்குமரன், சண்முகம், குப்புசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் திருமுருகன், சுப்ரமணியன், ரமேஷ்பாபு, அனந்தநாராயணன், அர்ச்சுனன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை