உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கான்ட்ராக்டர் கொலை: முகமூடி ஆசாமிக்கு வலை

கான்ட்ராக்டர் கொலை: முகமூடி ஆசாமிக்கு வலை

பண்ருட்டி : என்.எல்.சி., கான்ட்ராக்டர் கொலை வழக்கில் முகமூடி ஆசாமி ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 48; என்.எல்.சி., சப் கான்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம் ஜெயராமன் என்பவர் நிலத்தில் காலில் வெட்டுக் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீ÷õர் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று சுப்ரமணியன், நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முந்திரி தோப்பில் உல்லாசமாக இருந்தபோது முகமூடி அணிந்த ஆசாமி கத்தியால் வெட்டிவிட்டு பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை