| ADDED : நவ 23, 2025 06:27 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு, வெறிநாய் தடுப்பூசி போடும் பணிதீவிரம் அடைந்துள்ளது. கால்நடை டாக்டர் கோமகன், நகராட்சி சுகாதார அலுவலர் சிவராமகிருஷணன் தலைமையில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர், விருத்தாசலம் நகராட்சி தில்லை நகரில் சுற்றித்திரிந்த 30 தெருநாய்களை பிடித்து, வெறிநாய் தடுப்பூசி போட்டனர். அப்போது, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் செல்வம், ஆறுமுகம், கணபதி மற்றும் கல்நடை மருத்துவ குழுவினர் உடனிருந்தனர். இதுகுறித்து, நகராட்சி சுகாதார அலுவலர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் இருந்து 'டாக் கேச்சிங்' வலைகள் வரவழைக்கப்பட்டு, லாவகமாக நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. மேலும், தடுப்பூசி போடப்பட்ட நாய்களை அடையாளம் காண்பதற்காக,அவற்றின் கழுத்து மற்றும் தலை பகுதிகளில் மஞ்சள் மற்றும் நீல வண்ண ஸ்பிரே அடிக்கப்படுகிறது. இந்த மாதம் இறுதிவரை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடக்கும்,' என்றார்.