உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாஜி அ.தி.மு.க., கவுன்சிலர் த.வெ.க.,வில் ஐக்கியம்

 மாஜி அ.தி.மு.க., கவுன்சிலர் த.வெ.க.,வில் ஐக்கியம்

கடலுார்: கடலுார் மேற்கு மா வட்ட அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகி, அக்கட்சியிலிருந்து விலகி நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் த.வெ.க.,வில் இணைந்தார். விருத்தாசலத்தில் உள்ள த.வெ.க., கடலுார் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். நல்லுார் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அபிபத்மாவதி அக்கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் த.வெ.க.,வில் இணைந்தார். த.வெ.க.,வில் இணைந்த அபிபத்மாவதி மற்றும் சதாம்உசேன், குமரேசன், முனியம்மாள், ஜோதி, வீரமணி, பொன்னுசாமி, சிக்கந்தர் பாஷா, ஷமின், ஜெயஷீலி, ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு, மாவட்டசெயலாளர் விஜய் உறுப்பினர் அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை