உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் குட்கா பொருட்கள் பறிமுதல்... 6,224 கிலோ!ஓராண்டில் காவல்துறை நடவடிக்கை

மாவட்டத்தில் குட்கா பொருட்கள் பறிமுதல்... 6,224 கிலோ!ஓராண்டில் காவல்துறை நடவடிக்கை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 121 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் இந்தாண்டு நடந்த, 37 கொலை வழக்குகளில், 72 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில், 9 கொலை வழக்குகளில், 32 குற்றவாளிகளுக்கு கோர்ட் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. சாதி, மத ரீதியான, ரவுடி, கொலைகள் எதுவும் நிகழவில்லை. சட்ட விரோத உறவு, குடும்ப சண்டை, முன்விரோதம் மற்றும் பணப் பிரச்னை போன்ற 'திடீர்' ஆத்திர மூட்டல்களால் அனைத்து கொலைகளும் நிகழ்ந்துள்ளன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, குற்றவாளிகளை பிடிப்பதில் விரைவான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழி வாங்கும் கொலைகளுக்கான சாத்தியக்கூறுகளும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, அத்தகைய கொலைகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 2025 ல் பழிவாங்கும் கொலைகள் எதுவும் பதிவாகவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டிய, 3810 பேர், மொபைலில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய, 6,942 பேர், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்ற, 546 பேர் என மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து ஒழுங்கில் கவனம் செலுத்திய காரணத்தால் சாலை மரண விபத்துக்கள் குறைந்துள்ளன. சாலை மரண வழக்குகளில், 572 பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ, கஞ்சா, குட்கா, சாராய கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் உட்பட, 121 பேர் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர். 138 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட, 359 பேர் கைது செய்யப்பட்டு, 230 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை வழக்குகள், 307 பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட 403 பேர், கைது செய்யப்பட்டு, 6,224 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விற்பனை செய்த, 228 கடைகளுக்கு உணவு பாதுபாப்புத்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட, 130 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட, 178 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்தில் மது கடத்துவோர், மது விற்பனை செய்வோர் என, 2421 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,567 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 756 லிட்டர் சாராயம், 87 லிட்டர் 'கள்', 30 ஆயிரத்து, 922 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுவிலக்கு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட, 157 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், 119 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த 23 லட்சத்து, 39 ஆயிரத்து 232 ரூபாய் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் கஞ்சா குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட, 24 வாகனங்கள் பறிமுதல் செய்து ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த 7 லட்சத்து, 25 ஆயிரத்து, 345 ரூபாய் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8 போக்சோ குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் சிறப்பு கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கற்பழிப்பு, போக்சோ, வரதட்சணை போன்ற குற்ற வழக்குகளில், 621 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1063 பழைய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை