உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பல்லவா சர்வதேச பள்ளியில் கணித மன்றம் துவக்கம்

பல்லவா சர்வதேச பள்ளியில் கணித மன்றம் துவக்கம்

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த கீழக்குப்பம் பல்லவா சர்வதேச பள்ளியில் கணித மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளித் தாளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாணவர் கைலாஷ் வரவேற்றார். பள்ளி முதல்வர் மோகன், சிறப்பு விருந்தினர் கணித ஆசிரியர் ரமணன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.நடனம், வாய்ப்பாடு, ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகம், கணித புதிர் போட்டி, வினாடி வினா உள்ளிட்டவை நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவை ஆசிரியர்கள் சதீஷ்குமார், ராஜலட்சுமி, திவ்யா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.மாணவி லக்ஷிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !