உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

சிதம்பரம் : முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்குடி தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ.,தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெ., 76வது பிறந்தநாளை முன்னிட்டு கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.வரும் 26ம் தேதி காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, சீரணி அரங்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் , கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன், தலைமை நிலைய பேச்சாளர்கள் நடிகர் சுப்புராஜ், வீரப்பன் ஆகியோர் பேசுகின்றனர்.சிதம்பரம் நகரத்தில் பட்டாபிராம் பெட்ரோல் பங்க் எதிரில் வருகின்ற 28ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கோவை சத்யன், தலைமை நிலைய பேச்சாளர்கள் காரை செல்வம், ராமதாஸ் ஆகியோர் பேசுகின்றனர்.இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞரணி, ஜெ., பேரவை, பாசறை, இலக்கிய அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி