உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

கிருஷ்ணசாமி கல்லுாரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.முகாமில், சென்கார்ப் டெக்னோ சொல்யூஷன்ஸ் நிறுவன, கோயம்புத்துார் கிளை மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் ராஜ் தலைமையிலான குழுவினர், மாணவர்களை தேர்வு செய்தனர். இதில், இறுதியாண்டு மாணவர்கள் 114 பேர் பங்கேற்றதில், 5 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தாளாளர் ராஜேந்திரன், செயலர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு மற்றும் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை