உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலைப் பணியை முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

சாலைப் பணியை முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் சாலை பணியை முறையாக முடிக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னை கன்னியாக்குமரி தொழிற்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடலுாரியில் இருந்து மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நெல்லிக்குப்பத்தில் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒரு கி.மீ., துாரத்துக்கு சாலையை அளந்து விரிவாக்கம் செய்ய கோரினர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்காமல் சாலை போட்டனர்.தற்போது ரெடிமேடாக கால்வாய் கட்டி எடுத்து வந்து பள்ளம் தோண்டி புதைக்கின்றனர்.இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டுவதால் சாலை முழுவதும் ஜல்லிகள் சிதறி கிடக்கின்றன.மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமபடுவதோடு விபத்துகளும் நடக்கிறது. உடனடியாக பணிகளை முடித்து சாலையை முறையாக போட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை