உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

ஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

கடலுார்: ஐந்தொழிலில் உள்ளவர்களுக்கு தொழில் செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டும்எனக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் மாவட்டஐந்தொழில் விஸ்வகர்மா நலச்சங்கம் தலைவர் வேல்முருகன்தலைமையில் கொடுத்துள்ள மனு;நலிவுற்ற நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட எங்களுக்கு வீட்டுமனை பட்டாவழங்க வேண்டும். ஐந்தொழிலில் உள்ள எங்கள் இனத்தவர்களுக்கு தொழில்செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டும். வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்கள் பணியிடம் வழங்க வேண்டும்.தச்சு தொழிலில் முன் அனுபவமும், அரசு பயிற்சிமுடித்தவர்களுக்கு அரசு வேலையிலும், அறநிலைய துறையிலும் பணி வழங்கவேண்டும். தற்போது ஆயத்த தயாரிப்புகளுக்கு ஐந்தொழிலுக்கும், மின்சக்தியால் இயங்கும் எந்திரங்கள் பெற அரசு மான்யம் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை