உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரத்தனா பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

 ரத்தனா பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆகாஷ் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. அகாடமி மாணவர்களுடன் ரத்தனா பள்ளி மாணவர்களும் இணைந்து, இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழியை ஏற்றனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ரவி வாழ்த்தி பேசினார். இதில், 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தனர்.மேலும் இந்திய அரசியலமைப்பு சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்கள் மாணவர்களிடையே வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை