உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பயிர்களுக்கு நிவாரணம் : விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 பயிர்களுக்கு நிவாரணம் : விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநில துணைத்தலைவர் கருப்பையன் துவக்க உரையாற்றினார். தொ.மு.ச.,மாநில இணைசெயலாளர் பாரி, மாவட்ட கவுன்சில் செயலாளர் திருமாவளவன், காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும்; மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட குறுவை, சம்பா பயிர்களுக்கு நிவாரணம், காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்க வேண்டும்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை நிறுத்த வேண்டும்; என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ