உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெ.பொன்னேரி பாலத்தில் விளக்குகள் அமைக்க கோரிக்கை

பெ.பொன்னேரி பாலத்தில் விளக்குகள் அமைக்க கோரிக்கை

பெ.பொன்னேரி வெள்ளாறு மேம்பாலத்தில் சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி - சிலுப்பனுார் இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் வழியாக பஸ், லாரி, சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் தினசரி செல்கின்றன.மேலும், கடலுார், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலத்தின் இருபுறமும் இதுவரை மின் விளக்குகளோ, சோலார் விளக்கோ பொருத்தவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாலம் பகுதி இருளில் மூழ்குவதால் இவ்வழியே செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க அச்சமடைகின்றனர்.எனவே, பெ.பொன்னேரி வெள்ளாறு பாலத்தில் புதிதாக சோலார் விளக்குகள் அமைக்க இருமாவட்ட அமைச்சர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை