உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை! அடிக்கடி நிகழும் விபத்து உயிரிழப்புகள் தடுக்கப்படும்

பெண்ணாடம் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை! அடிக்கடி நிகழும் விபத்து உயிரிழப்புகள் தடுக்கப்படும்

பெண்ணாடம் : பெண்ணாடம்பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களை கருத்தில் கொண்டு,மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாகதரம் உயர்த்த வேண்டும் என,பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியாகவும், குறுவட்ட தலைமையிடமாகவும் உள்ளது.இங்கு,30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 5 டாக்டர்கள், 5 செவிலியர்கள், 6 உதவியாளர்கள் பணி புரிகின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி சுமார் 100 முதல் 300 பேர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 படுக்கைகள் கொண்ட கர்ப்பிணிகள் வார்டுகளும் உள்ளன.சுகாதார நிலைய வளாகம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் உள்ளே கசிந்து மருத்துவம் பார்க்க முடியாத நிலை தொடர்கிறது.இப்பகுதியில் ஏற்படும் சாலை விபத்துகளில் சிக்கி, உயிருக்கு போராடுபவர்களை மீட்டு சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், இங்கு கர்ப் பிணிகளுக்கான 24 மணிநேர பிரசவம், லேப் வசதி, குடும்ப கட்டுப்பாடு, அனைத்து வகை தடுப்பூசிகள், பள்ளி சிறார் திட்டம், கோவிட் போன்றவை களுக்கு ஊசி, மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஓமியோபதி சிகிச்சைக்கு தனியாக கட்டடம் உள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அவசர சிகிச்சை, பல் மருத்துவம், பிசியோதெரபி மருத்துவமும் பார்க்கப்படுகிறது.எகஸ்ரே, ஸ்கேன் வசதி உள்ளன. போதிய கட்டட வசதி, பிரேத பரிசோதனை கூடம் வசதி இல்லை.சுகாதாரமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர்.எனவே, நோயாளிகளின் நலன்கருதி, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை