உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கொதிக்கும் குருமாவில் விழுந்த மூன்று வயது குழந்தை உயிரிழப்பு

 கொதிக்கும் குருமாவில் விழுந்த மூன்று வயது குழந்தை உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், ஓட்டலில் வைத்திருந்த சூடான பரோட்டா குருமாவில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆனந்தன், 34; இவரது குழந்தை சுஷாந்த், 3, கடந்த, 18ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டின் பக்கத்தில் உள்ள ஓட்டலில், அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த பரோட்டா குருமாவில் தவறி விழுந்ததில் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குழந்தை இறந்தது. இது குறித்து தந்தை ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை