உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்மாற்றி திருட்டு மர்ம நபருக்கு வலை

மின்மாற்றி திருட்டு மர்ம நபருக்கு வலை

குள்ளஞ்சாவடி: விவசாய மின்மாற்றிகளை திருடிய நபரை போலீ சார் தேடி வருகின்றனர்குள்ளஞ்சாவடி அடுத்த அனுக்கம்பட்டு பகுதயில் விவசாய பயன்பாட்டிற்கான மின்மாற்றிகள் வயல்வெளி பகுதிகளில் அமைந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள இரண்டு மின்மாற்றிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.இதையடுத்து சுப்ரமணியபுரம் உதவி மின் பொறியாளர் ராஜா, 38, மின்மாற்றிகள் திருடுபோனது குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். மேலும் திருடுபோன மின்மாற்றிகளின் மதிப்பு ரூ.1.50 லட்மாகும். புகாரின் பேரில் குள்ளஞ் சாவடி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ