உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உயர் மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

 உயர் மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு -சி.என்.பாளையம் இடையில் உள்ள உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையில் நரியன்ஓடையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த பாலத்தின் ஒரு புறம் நடுவீரப்பட்டு ஊராட்சி, ஒரு புறம் சி.என்.பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவில் பாலம் இருளில் மூழ்கி உள்ளதால், அதை குடிமையமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாலத்தின் வழியாக நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர், அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை