உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது

திட்டக்குடி: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் காமராஜ்,53. அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ஆவட்டியிலிருந்து திட்டக்குடி செல்லும் அரசு பஸ் கண்டக்டராக வந்தார். பஸ்சை பிரபாகரன் என்ற டிரைவர் ஓட்டிவந்தார். ஈ.கீரனுார் கிராமத்திற்கு வந்த போது கண்டக்டர் காமராஜ், மாத்திரை எடுப்பதற்காக பஸ்சை நிறுத்தச்சொல்லிவிட்டு, வீட்டிற்கு சென்று மாத்திரை எடுத்து வந்தார்.அப்போது அவ்வழியே வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன்,32, என்பவர், பஸ்சின் முன்பு பைக்கை நிறுத்தி இங்கு ஏன் பஸ்சை நிறுத்தினாய் என திட்டி, காமராஜின் கன்னத்தில் அறைந்தார். இது குறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து அரிகிருஷ்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி