உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொடர்மழையால் உரக்கடைகளில் தோட்டப்பயிர் விதை விற்பனை ஜோர்

தொடர்மழையால் உரக்கடைகளில் தோட்டப்பயிர் விதை விற்பனை ஜோர்

அரூர்: அரூரில் பெய்த தொடர் மழையால், தனியார் உரக்கடைகளில் விதைகள் விற்பனை ஜோராக நடக்கிறது.அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்த-மலை, கீரைப்பட்டி, மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, மாம்-பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பை-நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்றும், மதியம், 1:30 மணி முதல் அரூர் பகு-தியில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை பெய்வதால் விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி செய்வதில், ஆர்வம் காட்டி வருகின்றனர். அரூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த விதை நெல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் தனியார் உரக்கடை-களில் நெல் விதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பயறு வகைகள், பீர்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற வீட்டு தோட்டப்பயிர்களை, உரக்கடைகளில் வாங்கி சாகுபடி செய்-வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ