உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2 வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

2 வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு

தொப்பூர் : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 47; இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, டீ கடைக்கு சென்றார். இதையறிந்த, மர்ம நபர்கள் மாதேஷ் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 7- பவுன் தங்க நகைகள் மற்றும் 3,000 ரூபாயை திருடி சென்றனர்.அதேபோல், ஏலகிரி அடுத்த போலனஹள்ளியை சேர்ந்த விவசாயி முருகன், 45; இவர் நேற்று காலை வெளியே சென்றவர், வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 7 பவுன் தங்க நகை மற்றும், 2,500 ரூபாய் திருடுபோனது தெரிய வந்தது. இரு திருட்டு சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ