உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக நுாலகம்

மக்கள் பயன்பாடின்றி காட்சி பொருளாக நுாலகம்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில், அஜ்ஜம்பட்டி, கும்பாரஹள்ளி, லுார்துபுரம், வைரனுார், வாசிக்கவுண்டனுார், பி.பள்ளிப்பட்டி கிராமங்கள் உள்ளன. இதில், 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பள்ளிப்பட்டியில் கிளை நுாலகம் உள்ளது.இதில், தினசரி நாளிதழ்கள் உட்பட பல்வேறு வகையான நுால்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை சேர்ந்த வாசகர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பலர் வந்து நுால்களை படித்து வந்தனர். மேலும் போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்கள், பல்வேறு நுால்களை படித்து தேர்வுக்கு தயாரானார்கள்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, இந்த நுாலகம் பூட்டிய கிடக்கிறது. ஆண்டுதோறும் வர்ணம் மட்டுமே பூசப்பட்டு, புதுப்பொழிவு காண்கிறது. நுாலகம் திறக்கப்படாததால் பயன்பாடின்றி வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நுாலகம் பூட்டியே கிடப்பது குறித்து யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிலுள்ள நுால்கள் வீணாகி வருகின்றன. இதனால் யாருக்கும் எந்த ஒரு நன்மையும் கிடைக்காமல் போய் விட்டது. நுாலகம் திறக்கப்பட்டால், அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை