| ADDED : ஆக 02, 2024 01:37 AM
தர்மபுரி, தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், செங்குந்தர் திருமண மண்டம் உள்ளது. இதில் நடந்த சுவாமி திருக்கல்யாண விழாவையொட்டி, மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உபகார பூஜை நடந்தது. பின், ஆகம விதிகளின் படி, சுந்தரேஸ்வரர் -மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு பூஜை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது.இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் சேகரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் உட்பட, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.