தர்மபுரி: தர்மபுரி ஆவினில், பால் பாக்கெட்டுகள் தயாரித்து விற்ப-னைக்கு அனுப்பும் பணியை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பால் உற்-பத்தியாளர்கள் ஒன்றியம் எனப்படும் ஆவின், கிருஷ்ணகிரியில் இயங்கி வந்தது. கடந்த, 2019, ஆக., 26ல், தர்மபுரி, கிருஷ்ண-கிரி ஆவின் அலுவலகங்கள் பிரிக்கப்பட்டன. இருப்பினும், தர்ம-புரி மாவட்ட ஆவினில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி ஆவினில் இருந்து தினந்-தோறும், 7,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் தர்மபுரி மாவட்டத்-திற்கு அனுப்பப்பட்டு வந்தன.கடந்த, 11ல், தர்மபுரிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், 50,000 லிட்டர் அளவில் பால் பதப்படுத்தும் இயந்-திரங்களின் பணியை துவக்கி வைத்தார்.கடந்த இரு வாரங்களாக இயந்திரங்களின் செயல்பாடுகள், பாலின் தன்மை, சரியான அளவிலான குறியீடுகள் குறித்து அலு-வலர்கள் ஆய்வு செய்து வந்தனர். ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், தர்மபுரி ஆவினில் இருந்து, பால் பாக்கெட்டுகள் தயார் செய்து அனுப்பும் பணி நேற்று துவங்கியது. அப்பணி-களை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டார்.அப்போது, ஆவின் பொதுமேலாளர் மாலதி, பால்வள துணைப்-பதிவாளர் நவராஜ், மேலாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்-கேற்றனர்.