உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பும் பணி

தர்மபுரி, தர்மபுரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு, லோக்சபா தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் சாந்தி பேசியதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தால் லோக்சபா தேர்தல் அறிவிப்பு கடந்த, 16 ல் வெளியிடப்பட்டது. வரும் ஏப்., 19ல் பொது தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய, 5 சட்டசபை தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பும் பணி தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார். இதில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை