உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குறிஞ்சி மெட்ரிக் பள்ளி திறனறி தேர்வில் சிறப்பிடம்

குறிஞ்சி மெட்ரிக் பள்ளி திறனறி தேர்வில் சிறப்பிடம்

அரூர், தமிழக அரசு நடத்திய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, கடந்த மாதம், 11ம் தேதியன்று நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சின்னாங்குப்பம், குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.இதில் மாணவி மித்ரா, 100க்கு, 97 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி கனிஷ்கா, 100க்கு, 96 மதிப்பெண்களும், மாணவியர் வர்ஷினி, நிவாஷினி தலா, 100க்கு, 96 மதிப்பெண்களும், மாணவி விஷாலினி, 100க்கு, 95 மதிப்பெண்களும், மாணவர் கவின், 100க்கு, 94 மதிப்பெண்களும், மாணவி கோபிகா, 100-க்கு, 90 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். அம்மாணவ, மாணவியரை, குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர், ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை