உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் ரூ.5 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி அருகே ஆன்லைன் ரம்மியில், ஐந்து லட்சம் ரூபாயை இழந்தவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.தர்மபுரி, அழகாபுரியை சேர்ந்தவர் ராஜராஜன், 55, டெய்லர்; இவரின் மனைவி தனலட்சுமி. தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டருகே தென்னந்தோப்பில், உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் வரை தோற்றதால், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தது தெரியவந்தது. வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'ஆன்லைன் ரம்மி விளையாட பலரிடம், ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றேன். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை