உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் புதிய பஸ்கள் இயக்கம் தொடக்கம்

தர்மபுரியில் புதிய பஸ்கள் இயக்கம் தொடக்கம்

தர்மபுரி: பெங்களூரு - திருப்பதி வழித்தடத்தில், புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்செல்வம், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் ஆடி பெருக்கு விழாவை தொடங்கி வைக்க, வேளாண்துறை அமைச்சர் தர்மபுரி வந்தார். முன்னதாக, தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில், பெங்களூரு - திருப்பதி வழித்தடத்தில், தர்மபுரி வழியாக, இயக்கபட்ட பழைய பஸ்களுக்கு மாற்றாக, 10 புதிய பஸ்களை அமைச்சர் பன்னீர்-செல்வம், தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்ம-புரி மண்டல பொது மேலாளர் திருசெல்வம், மாசுகட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் நித்தியலட்சுமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ