மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
1 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
1 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
1 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏற்காடு மலை அடிவாரத்தின் பின் பகுதியில் தேவராஜபாளையம், மோளையானுார், பூனையானுார், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, செங்கல்பட்டி, திடீர் நகர், முள்ளி காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் தண்ணீர் தேடி, அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும், கிராமங்களுக்கு வருகின்றன. வரும் காட்டெருமைகள் பயிர்களை நாசம் செய்கின்றன. நேற்று காலை, 6 காட்டெருமைகள் பூனையானுார் வழியாக மோளையானுார் கிராமத்திற்குள் நுழைந்தன. இதைக்கண்ட மக்கள் அலறியடித்து ஓடினர்.தகவலின் பிடி மொரப்பூர் வன சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், வனவர் செந்தில்குமார், வனக்காப்பாளர்கள் கபில், வேடியப்பன் ஆகியோர் வந்து, காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில், 5 காட்டெருமைகள் வாணியாற்றில் இறங்கி, ஏற்காடு மலையை நோக்கி சென்றன. ஒரு ஆண் காட்டெருமை மட்டும் செந்தில்குமார் என்பவரின் விவசாய நிலத்தில் நுழைந்தது. அதை விரட்டும் பணியில், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். காட்டெருமைகளால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago