மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
10 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
10 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
10 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
10 hour(s) ago
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, 5:30 முதல், நேற்று அதிகாலை, 1:00 மணி வரை, இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், அரூர் நகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், அரூர் அம்பேத்கர் நகரில் மழை நீர் செல்லும் வழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டியதால், கழிவுநீர் கால்வாயில் மழை நீர் செல்ல முடியாமல் அப்பகுதியில் தேங்கியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதிப்பட்டனர். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி, நேற்று காலை, 8:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரூர்-திருவண்ணாமலை சாலையில், அம்பேத்கர் நகர் துவக்கப்பள்ளி எதிரில், சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த வருவாய்த்துறையினர், டவுன் பஞ்., அலுவலர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 8:30 மணிக்கு கலைந்து சென்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago