உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

தர்மபுரி: அரூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டி கிராம மக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:அரூர் அடுத்த எம்.வேட்ரப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த, 20, ஆண்டுகளுக்கு முன் ஆதி திராவிடர் கிராம நத்தத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தை தனிநபர் ஒருவர் தற்போது வரை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். எனவே, இந்த இடத்தை மீட்டு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, பல ஆண்டுகளாக விண்ணப்பித்துள்ள பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு, இதை உடனடியாக வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை