தர்மபுரி, தர்மபுரி டவுன் நெசவாளர் காலனியிலுள்ள, மஹாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று தேய்பிறை பிரதோஷத்தையொட்டி பால், இளநீர், சந்தனம், தேன், குங்குமம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடகத்துாரில் உள்ள சேமேஸ்வரர் கோவில், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அதியமான்கோட்டை சோமேஷ்வரர், பி.எஸ்.அக்ரஹாரம் மரகதாம்பிகா சமேத ஸ்ரீமார்கசகாய ஈஸ்வரன், உட்பட மாவட்டத்தில் உள்ள, பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. * அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.